News March 22, 2025

புதிய ரேஷன் கார்டுகளுக்கு ₹1,000 மகளிர் உரிமை தொகை!

image

புதிதாக ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்த 57,327 பேருக்கு ‘Smart Card’ அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், தகுதி வாய்ந்த நபர்கள் ₹1,000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் கூறியிருந்த நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 30, 2025

மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம்

image

பிற்பகல் (12 -3 மணி வரை) நேரத்தில் கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் வெளியே வராமல், வீட்டிலேயே இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சு. கேட்டுக்கொண்டார். வெயில் காலத்தில் தர்ப்பூசணி நல்ல நீர்ச்சத்து உள்ள பழம் என்றும் இந்த பழத்தை உட்கொள்வது நல்லது என்றாலும், தீய நோக்கம் கொண்டவர்கள், கலப்படம் செய்வதாகவும் கூறினார். இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

News March 30, 2025

மது, டீ, காபி குடிக்காதீங்க

image

கோடை காலத்தில் காபி, டீ, மது போன்றவற்றை அருந்துவதைத் தவிர்க்க வேண்டுமென அமைச்சர் மா.சு அறிவுறுத்தியுள்ளார். கோடை காலத்தில் மது அருந்தாமல் இருப்பது நல்லது. மது குடிக்கக் கூடாது எனில் மதுக்கடை திறந்திருக்கிறதே என சிலர் கேட்கிறார்கள். மெடிக்கல் ஷாப்பில் விஷம் கூட உள்ளது எனக் கூறிய அவர், எது தேவை என்பதை அறிந்து எடுத்துக் கொள்வதுதான் நல்லது என்று தெரிவித்துள்ளார்.

News March 30, 2025

சல்மான் கானால் கலக்கத்தில் SK ஃபேன்ஸ்!

image

இன்று வெளியான சிக்கந்தர் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சல்மான் ரசிகர்கள், படத்தைக் கொண்டாடினாலும், பொதுவான ஃபேன்ஸ் பல காட்சிகள் ‘Cringe’ ஆக இருப்பதாகவே பதிவிட்டு வருகின்றனர். இதனால், SK ஃபேன்ஸ்தான் பதறுகின்றனர். காரணம், சிக்கந்தரை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தான் அடுத்த SKவின் மதராஸியை இயக்கி இருக்கின்றார். கடவுளே படம் நல்லா இருக்கணும் என இப்பவே வேண்டிக் கொள்ள தொடங்கிவிட்டனர்.

error: Content is protected !!