News December 5, 2024
வங்கிக் கணக்கு இருந்தால் தான் ₹1,000 பொங்கல் பரிசு?

பொங்கல் பரிசாக ரூ.1000-ஐ பொதுமக்கள் வங்கிக் கணக்கில் அரசு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கினால் தான், பொங்கல் பரிசு கிடைக்கும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையில்லை, பொங்கல் பரிசு வழங்குவதற்கும், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
BREAKING: அறிவித்தார் விஜய்

கரூர் துயரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹20 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும், அது கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.
News October 18, 2025
Sports Roundup: வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை

*சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. *இஸ்தான்புல்லில் நடந்த சர்வதேச வாள்வீச்சு தொடரில் பவானி தேவி வெள்ளி வென்றார். உலக ஜூனியர் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தான்வி சர்மா முன்னேற்றம். *ஆசிய மகளிர் 7’S ரக்பி சீரிஸில், இந்தியா 0-43 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி.
News October 18, 2025
பிறந்த குழந்தையை எப்போது தூளியில் போடணும்?

பிறந்த குழந்தையை தூங்க வைக்க காலங்காலமாக நாம் பயன்படுத்துவது தூளிதான். ஆனால், இதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். குழந்தை பிறந்து 2 வாரங்களுக்கு பின்பே தூளியில் போடவேண்டுமாம். மேலும், குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு தூளி பயன்படுத்துவதை குறைப்பது நல்லதாம். குழந்தையை சீக்கிரம் தூங்க வைக்க தூளியை வேகமாக ஆட்டக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். SHARE.