News August 9, 2024
மாணவர்களுக்கு மாதம் ₹1,000 திட்டம் இன்று தொடக்கம்

அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை 11.15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, இத்திட்டத்தில் தேர்வான மாணவர்கள் வங்கி கணக்கில் உடனடியாக ₹1,000 செலுத்தப்படும். இதன் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இத்திட்டத்துக்கு தமிழக அரசு ₹360 கோடி ஒதுக்கியுள்ளது.
Similar News
News December 1, 2025
BREAKING: விபத்தில் அதிமுக முக்கிய தலைவர் மரணம்

அதிமுக மூத்த தலைவர் வி.சி.ராமையா சாலை விபத்தில் உயிரிழந்தார். 2012-ல் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் பொருளாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். வாண்டாகோட்டை அருகே இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான ராமையாவின் மரணம் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News December 1, 2025
சிவகங்கை பஸ் விபத்து: PM மோடி இரங்கல்

காரைக்குடி அருகே <<18432348>>அரசு பஸ்கள் விபத்தில்<<>> ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிப்பதாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறிய அவர், PMNRF-ல் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 1, 2025
கேப்டன் கில்லின் நிலை என்ன?

SA-வுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெஸ்ட் & ODI தொடரில் இருந்து விலகிய அவர், இன்று BCCI-யின் சிறப்பு மையத்தில் (CoE) பயிற்சியை தொடங்கவுள்ளாராம். ஓரிரு நாள்களில் பேட்டிங் பயிற்சியை அவர் தொடங்குவார் என்றும், அதை தொடர்ந்தே SA-வுக்கு எதிரான T20 போட்டிகளில் கில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.


