News March 14, 2025
நாளை வங்கிக் கணக்கில் ₹1,000

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, TN அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் இத்தொகை, நாளை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதனிடையே, இன்றைய தமிழக பட்ஜெட்டில் மகளிர் உதவித்தொகை திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்பட்டு, ₹1,000ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News March 14, 2025
இணையும் புதன் – சுக்கிரன்: மிரட்ட போகும் 3 ராசிகள்!

மார்ச் 13ஆம் தேதி புதனும், சுக்கிரனும் மீன ராசியில் இணைந்துள்ளனர். அதே நாளில், சூரிய பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த இரு விசேஷ நிகழ்வுகளால் மேஷம், விருச்சிகம், சிம்மம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகிறது. எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி உண்டாகும். கவலைகளை சிதறடிப்பீர்கள். தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியம் மேம்படும். காதல் திருமணம் கைக்கூடும்.
News March 14, 2025
IPL: பும்ரா இல்லாத MI? ஷாக் தகவல்

காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், IPLல்லின் முதல் சில மேட்ச்களில் பும்ரா விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. BCCI மெடிக்கல் டீம் கிளியரன்ஸ் கொடுத்தால் மட்டுமே அவர் வரும் ஏப்ரலில் MI அணிக்கு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. எத்தனை மேட்ச்களில் பும்ரா விளையாடமாட்டார் என்பதும் இன்னும் தெரியவரவில்லை. AUSக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
News March 14, 2025
ஆப்கான் கிரிக்கெட் வீரருக்கு சோகம்… தாங்க முடியாத இழப்பு!

அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை உற்சாகப்படுத்துபவர் ஆப்கான் கிரிக்கெட் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய். ஆனால், அவரது வீட்டில் நடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹஸ்ரத்துல்லாவின் 2 வயது மகள் உயிரிழந்துள்ளதாக, சக வீரர் கரிம் ஜனத் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பிஞ்சுக் குழந்தையின் படத்தைப் பதிவிட்ட அவர், இத்தகைய கடினமான நேரத்தில் இதயம் சோகத்தில் மூழ்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.