News October 1, 2025
₹1000 அபராதம் … வந்தது அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளை கண்காணிக்க தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால், ₹1000 வரை அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே எச்சரித்துள்ளது. இதற்கு 50 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 10, 2026
தேமுதிகவால் திமுக கூட்டணியில் அதிருப்தியா?

பல தேர்தல்களாக கூட்டணியில் இருக்கும் தங்களுக்கு தொகுதிகளை குறைத்துவிட்டு, தேமுதிகவுக்கு அதிகமாக வழங்கியதால் திமுக மீது அதன் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ’தேமுதிகவை நம்பி இவ்வளவு தொகுதிகளை கொடுக்குறீங்களே, அடுத்த எலெக்ஷனுக்கு NDA-வில் இணைந்துவிட்டால் என்ன செய்வது’ என கூட்டணி கட்சிகள் கேட்டதற்கு, தேமுதிக அப்படி செய்யாது என திமுக கேரண்டி கொடுத்ததாக கூறப்படுகிறது.
News March 10, 2026
ஐரோப்பிய நாடுகளுக்கு உதவத் தயார்: ரஷ்யா

போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க தயாராக இருப்பதாக புடின் அறிவித்துள்ளார். அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நீண்டகால ஒத்துழைப்பை வழங்கினால் எண்ணெய் அனுப்புவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
News March 10, 2026
கேஸ் புக்கிங் செய்ய இனி 25 நாள்கள் காத்திருக்கணும்

நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பதுக்கல் & கள்ளச்சந்தையை தடுக்க, 2 சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 25 நாள்கள் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு Commercial கேஸ் சப்ளையில் முன்னுரிமை அளிக்கவும், ஹோட்டல்கள், பிற தொழிற்சாலைகளுக்கான சப்ளையை மதிப்பாய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


