News March 1, 2025
நியூஸ் பேப்பரில் வடை கொடுத்தால் ₹1,000 அபராதம்

நியூஸ் பேப்பர் அச்சு மையில் காரீயம் உள்ளது. இதனால், அதில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் வைத்து சாப்பிட்டால், நமது உடலுக்குள் காரீயம் சென்று தீங்கு ஏற்படுத்தும். இந்நிலையில், சிவகங்கையில் நியூஸ் பேப்பரில் வடை விற்பனை செய்த கடைகளுக்கு ₹1,000 அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத் துறையினர், மீண்டும் இதுபோன்று விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.
Similar News
News March 3, 2025
சர்ச்சைக்கு ஒரே வரியில் பதிலளித்த ரோகித்

CT தொடரின் அரையிறுதிப்போட்டியில் நாளை IND – AUS மோதுகின்றன. இதற்கிடையில் ஒரே மைதானத்தில் இந்திய அணி அனைத்துப் போட்டிகளையும் விளையாடுவதும், இதனால் தான் அரையிறுதிக்கு முன்னேறியதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து ரோகித் சர்மா, அரையிறுதியில் எந்த மைதானத்தில் விளையாடப் போகிறோம் என எங்களுக்கே தெரியாது. இந்த துபாய் கிரவுண்டு எங்களுக்கும் புதிது தான், Home Ground கிடையாது என விளக்கமளித்தார்.
News March 3, 2025
இடமாறும் கிரகங்கள்: 3 ராசிகளுக்கு ராஜயோகம்!

இந்த மார்ச் மாதம் சனி பகவானுடன் சேர்ந்து சூரியனும், புதனும் தங்கள் ராசியை மாற்றுகின்றனர். இந்த மாற்றத்தால் மேஷம், மிதுனம், கடகம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. சமூகத்தில் மதிப்பு உயரும். வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு திக்குமுக்காட செய்யும். முதலீடு, வியாபாரம் செழிக்கும்.
News March 3, 2025
புகைப் பழக்கம் இல்லையா? 6 நாள் லீவு

ஆபிஸ் டென்ஷன், ஒரு தம் போட்டு வரலாம் என பிரேக் எடுப்பவர்கள் அதிகம்! இப்படி நேர விரயம் செய்வதை தடுக்க டோக்கியோவில் இயங்கும் நிறுவனம் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. புகை பழக்கம் இல்லாதவர்களுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக 6 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு அளிப்பதுதான் அது. இதனால், அலுவலக நேரத்தில் ஊழியர்கள் புகை பிடிப்பதை குறைக்கலாம் என்பது நிறுவனத்தின் எண்ணம். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?