News April 25, 2025
₹1000 கோடி முதலீடு… தொழில்துறையை ஈர்க்கும் TN

தமிழ்நாட்டில் மேலும் ₹1000 கோடி முதலீடு செய்வதாக சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை CM ஸ்டாலின் திறம்பட கையாண்டதாகவும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு சென்றதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
அரியலூர்: வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயலட்சுமி கலந்து கொண்டு, மாவட்ட திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
News November 21, 2025
வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்? இது உங்களுக்குதான்..

வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய விதிகள் அமலாகி உள்ளன. இந்த புதிய வாடகை விதிகள் 2025, வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு இடையே வாடகையை வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை என்னென்ன விதிகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 21, 2025
நாட்டின் பகுதிகளை இழக்க தயாராகிறதா உக்ரைன்?

ரஷ்யா உடனான போரை நிறுத்த, USA உடன் இணைந்து செயல்படுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அடுத்த சில நாள்களில் இது தொடர்பாக டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், தாங்கள் முன்வைத்த பெரும்பாலான நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக USA உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். USA நிபந்தனைகளின்படி, ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள பல பகுதிகளை உக்ரைன் இழக்க நேரிடும்.


