News October 25, 2024
நடத்துநரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிவாரணம்

சென்னை மாநகர பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடத்துநர் ஜெகன்குமாருக்கும், போதையில் இருந்த பயணி கோவிந்தனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஜெகனின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
AVM சரவணின் மறைவால் கண்ணீரில் தமிழ் திரையுலகம்

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் AVM சரவணனின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையே கண்ணீர் கடலில் தத்தளிக்க வைத்துள்ளது. CM ஸ்டாலின் முதல் ரஜினி, சிவகுமார் என அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது இறுதி அஞ்சலியை அவரது பாதங்களில் சமர்ப்பித்து வருகின்றனர். AVM ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News December 4, 2025
பாமக யாருக்கு? கோர்ட் உத்தரவு

பாமக யாருக்கு என்ற வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தை அணுக டெல்லி HC உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள்விவகாரங்களில் EC தலையிட முடியாது என்ற கோர்ட், கடிதங்கள் அடிப்படையில் EC முடிவெடுக்க முடியாது எனவும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் தொடுத்த இவ்வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, அன்புமணிக்கு எதிரான ஆவணங்களோடு அவர் உரிமையியல் கோர்ட்டை நாடுவார் என கூறப்படுகிறது.
News December 4, 2025
சொந்த வீடு கட்டணுமா? காசு தரும் அரசு திட்டம்!

PM ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ₹2.67 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கிறது. இந்த மானியம் 3 தவணைகளாக வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு இல்லாதவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற டிச.31-க்குள் <


