News February 9, 2025

கூட்டுறவு வங்கிகளில் ₹1 லட்சம் கோடி கடன் இலக்கு

image

கூட்டுறவு வங்கிகளில் நடப்பு நிதியாண்டில் அனைத்து பிரிவுகளிலும் ₹1 லட்சம் கோடி கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, நகைக்கடன், பயிர்க்கடன் என ₹85,000 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதியாண்டு முடிவடைய ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், இலக்கை அடைவது கடினமாகியுள்ளது. தொடர்ந்து, மகளிர் குழு, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தி இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News February 10, 2025

நாய்களுக்கு எல்லாம் குடும்பம் இருக்கக் கூடாதா?

image

விபத்தில் துணையை இழந்த நாய் ஒன்று பிரிய மனதில்லாமல் கூடவே அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த நாயின் கண்களில் இருக்கும் ஏக்கமும் வருத்தமும் “எங்களுக்கு எல்லாம் குடும்பம் இருக்கக் கூடாதா?” என்று கேட்பது போல உள்ளது. விலங்குகள் ஐந்தறிவு ஜீவன்கள் என்று நாம் கூறினாலும் அன்பு, காதல் ஆகியவை அனைவருக்கும் ஒன்றே என்பதை இந்த போட்டோ உணர்த்துகிறது.

News February 10, 2025

பெற்றோர்களின் செக்ஸ் பற்றி கேள்வி: சர்ச்சையில் யூடியூபர்

image

India’s Got Latent நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாஹபடியா பேசிய ஆபாச பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘வாழ்நாள் முழுவதும் உன் பெற்றோர் உறவு கொள்வதை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா? அல்லது நீ அதில் ஈடுபட்டு அந்த பழக்கத்தை நிறுத்தப் போகிறாயா?’ என்று கேட்டதுடன், போட்டியாளர்களிடம் ஆபாசமான கேள்விகள் கேட்டுள்ளார். இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோருகின்றனர்.

News February 10, 2025

திமுக அமைச்சர் ஜெயில் செல்வார்: அண்ணாமலை

image

2026ஆம் ஆண்டு தே.ஜ. கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைத்தவுடன் சிறைக்கு செல்லப் போகும் முதல் நபராக அமைச்சர் காந்தி இருப்பர் என்று அண்ணாமலை பேசியுள்ளார். பொங்கல் தொகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஆண்டுதோறும் அமைச்சர் காந்தி ஊழல் செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அவரை உடனடியாக முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!