News August 18, 2025
மானியத்துடன் ₹1 கோடி கடன் திட்டம் நாளை தொடக்கம்

முன்னாள் ராணுவ வீரர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்துடன் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30% மானியத்துடன் ₹1 கோடி வரை வங்கி கடன் பெற முடியும். இந்த திட்டத்தில் பயன்பெற www.exwel.tn.gov.in இணையதளத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், பயனாளிகளுக்கு கடன் வழங்கும் வகையில் திட்டத்தை நாளை CM ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
Similar News
News March 19, 2026
அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ள ஏ.சி. சண்முகம்

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் EPS பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பாஜகவுடன் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக EPS கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை NDA கூட்டணியில் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

3வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு!

அரசு ஊழியர்களாகப் பணியாற்றும் பெண்களுக்கு 3-வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. TN-ல் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், 3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பை வழங்க சென்னை HC சமீபத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.