News March 15, 2025
தமிழகத்தில் ஒவ்வொரு நபருக்கும் ₹1.32 லட்சம் கடன்

TN அரசின் கடன் வரும் நிதியாண்டில் ₹9.30 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இக்கடனை ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டால், தலா ஒரு குடும்பத்துக்கு ₹4.13 லட்சம் கடன் இருக்கும். TNல் தற்போது, 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 7.03 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அதன் அடிப்படையில், தனி நபருக்கு கணக்கிட்டால் ஒவ்வொரு நபருக்கும் தலா ₹1.32 லட்சம் கடன் உள்ளது.
Similar News
News March 16, 2025
பதவியில் நீடிப்பாரா அப்பாவு? – நாளை விவாதம்

அப்பாவுவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அதிமுகவின் உதயகுமார் கொண்டுவந்த தீர்மானம் நாளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தீர்மானத்தின் மீது உதயகுமார் பேசியதை அடுத்து, முதல்வரோ, அவை முன்னவரோ விளக்கம் அளிப்பர். இதனையடுத்து, குரல் வாக்கெடுப்பு (அ) டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தி முடிவு எடுக்கப்படும். பேரவையில் திமுகவின் பலம் 133 ஆகவும், அதிமுகவின் பலம் 66 ஆகவும் உள்ளது.
News March 16, 2025
பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: 90 வீரர்கள் பலி?

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்தி பெரிய தாக்குதலை நடத்திய BLA இயக்கத்தினர், பாக்., அரசுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளனர். குவெட்டாவில் இருந்து டஃப்டான் நோக்கி சென்ற 7 ராணுவ வாகனங்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் 90 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக BLA அறிவித்துள்ளது. ஆனால், 7 வீரர்கள் மட்டுமே பலியானதாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
News March 16, 2025
பிரபல கவிஞர் காலமானார்.. முர்மு, மோடி இரங்கல்

பிரபல ஒடியா கவிஞரும், ஒடிஷா EX CS-மான ரமாகாந்த் ரத் காலமானார். அவர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கலில், தனது மறக்க முடியாத படைப்புகளால் ரமாகாந்த் அகில இந்திய இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மோடி வெளியிட்ட இரங்கலில், ரமாகாந்த் மறைவு மிகுந்த வேதனையை அளித்ததாக கூறியுள்ளார். ரமாகாந்த், சாஹித்ய அகாடமி, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.