News August 14, 2024
ஹோட்டல் மேனேஜ்மென்ட் சேர ஆட்சியர் அழைப்பு

சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹாஸ்பிடால்டி துறையில் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் சேருவதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News November 27, 2025
BREAKING: தஞ்சை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.28 (நாளை) மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!
News November 27, 2025
BREAKING தஞ்சை: பெண் டீச்சர் வெட்டி படுகொலை!

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காவியா. இவர் ஆலங்குடி அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காவியாவும் பாபநாசம் பகுதி சேர்ந்த அஜித்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவியாவிற்கு வேறு இடத்தில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் காவ்யாவை வெட்டி படுகொலை செய்துள்ளார்.
News November 27, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுப்பெற்றது. மேலும் இது வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டதின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.27) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


