News August 4, 2024

ஹைட்ரஜன் ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்

image

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் ஒப்பந்த படி தூத்துக்குடியில் சிங்கப்பூரை சேர்ந்த செம் கார்ப் நிறுவனம் ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆக.21 இல் நடைபெற உள்ளதாகவும் இதில் தமிழக முதல்வர் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Similar News

News September 17, 2025

தூத்துக்குடி- சென்னை சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு

image

தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் செப்டம்பர் 29 அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- தூத்துக்குடி சிறப்பு ரயில் சென்னையிலிருந்து செப்டம்பர் 30 அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 12:30 மணிக்கு புறப்படும். இந்த ரயிலுக்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது.

News September 17, 2025

தூத்துக்குடி: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

image

தூத்துக்குடி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:0461-2325606. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!

News September 17, 2025

தூத்துக்குடி: 12.86 கோடி வரிபாக்கி பெண் அதிர்ச்சி!

image

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டினத்தை சேர்ந்த கிளமென்ஸி என்ற பெண்ணுக்கு, ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. எவ்வித தொழிலும் செய்யாத ஏழ்மை நிலையில் உள்ள தனக்கு இவ்வளவு பெரிய தொகைக்கு வரி பாக்கி வந்திருப்பதால் அதிர்ச்சி அடைந்த அவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

error: Content is protected !!