News April 22, 2025
ஹெராயின் வைத்திருந்த அஸ்ஸாம் வாலிபர்கள் 2 பேர் கைது

புனித தோமையர் மலை போலீசார் நேற்று மாலை, ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள தபால் அலுவலகம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி வந்த 2 பேரை சோதனை செய்தபோது, 25 கிராம் ஹெராயின் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரித்ததில் அஸ்ஸாம்மை சேர்ந்த மன்சூல் இஸ்லாம் (28), முபாரக் அலி (27) ஆகிய இருவரை கைது செய்தனர்.
Similar News
News April 23, 2025
VAO அலுவலகத்தில் பெண் உதவியாளர் தற்கொலை

அச்சரப்பாக்கம் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் கீதா. கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வரும் ஆண்கள் சிலர் மது போதையில் வருவதால், தன்னுடைய பணியை மேற்கொள்ள முடியாமல் கீதா தவித்துள்ளார். இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அண்மையில் ஆய்வு மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர், கீதாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மனம் உடைந்த கீதா கதறி அழுததோடு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
News April 22, 2025
குழந்தை வரம் தரும் செங்கல்பட்டு முருகன்

செங்கல்பட்டு அச்சிறுபாக்கத்தில் மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகன் சிலை மரகத கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகர் பழநி தண்டாயுதபாணியை போலவே இருப்பதால் ‘நடுபழநி’ என இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் வங்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 22, 2025
மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ X <