News March 29, 2025
ஹீட்டர் போடும்போது கவனம்: உயிரே போய்விடும்

மணிமங்கலத்தில், ஹீட்டர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்த சிறுவன் (12) உயிரிழந்தான். நீங்கள் ஹீட்டர் போடும்போது, ஈரக்கையால் சுவிட்சை தொட கூடாது. ஹீட்டர் சூடாகி கொண்டிருக்கும்போது, சுவிட்சை ஆஃப் செய்யாமல் தொட்டு பார்க்க கூடாது. முடிந்த அளவுக்கு தொட்டு பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அதிக நேரம் சுட வைப்பதையும் தவிர்க்க வேண்டும். ஹீட்டர் அருகில் குழந்தைகளை செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 3, 2025
சென்னை மாநகராட்சியில் வேலை

சென்னை மாநகராட்சி தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவி பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் உட்பட 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணபிராத்தை இந்த <
News April 3, 2025
காதலியை கல்லால் அடித்து கொன்ற காதலன்

அனகாபுத்தூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (33) கணவரை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். வீட்டருகே வசிக்கும் ஞானசித்தன் உடன் பாக்யலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 1) பாக்கியலட்சுமி வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசி கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்து ஞானசித்தன் கடப்பா கல்லை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் போட்டு கொலை செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
News April 3, 2025
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, ஆதம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பல்லாவரம், கோயம்பேடு, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?