News March 29, 2025
ஹீட்டரில் கையைவிட்ட சிறுவன் தூக்கி வீசப்பட்டு பலி

தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் – தாட்சாயணி தம்பதி. இவர்களது மகன் தமிழரசன் (12) நேற்று (மார்ச் 28) மதியம் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் சுட வைத்தார். தண்ணீர் சூடாகிவிட்டதா என்பதை அறிய ஹீட்டரில் கை வைத்த பார்த்தபோது, தமிழரசன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 5, 2025
செங்கல்பட்டு: இதற்கு எப்போது தீர்வு?

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், கர்நாடக பக்தர்கள் படையெடுப்பு என, விழாக்காலம் துவங்க உள்ளது. இக்காலத்தில் வாகன நெரிசலால் போக்குவரத்து முடங்காமல் தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே இங்கு வாகன நெரிசலால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பாதிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
News December 5, 2025
செங்கல்பட்டு: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

செங்கல்பட்டில் இன்றைய(டிச.4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.