News August 3, 2024
ஹமாஸ் தலைவர் கொலையில் குழப்பம்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது வெடிகுண்டு தாக்குதலிலா, ராக்கெட் தாக்குதலிலா என்பதில் குழப்பம் நிலவுகிறது. டெஹ்ரானில் அவர் தங்கியிருந்தது விருந்தினர் மாளிகை என்றும், ஒரு வாரத்துக்கு முன்பே வெடிகுண்டு மறைத்து வைத்து, அதை வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் அமெரிக்கா தெரிவித்தது. ஈரான் தரப்பிலோ, ராக்கெட் வீச்சில் பலியானதாக கூறப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் நிலவுகிறது.
Similar News
News September 18, 2025
உலகில் விளங்க முடியாத வினோதங்கள்

உலகில் கண்டறியப்பட்ட பழமையான பொருள்களில் சில வினோதமாகவும் மர்மமாகவும் உள்ளன. அவை எதற்கு? ஏன்? யார் உருவாக்கியது? என்று பல கேள்விகளுக்கு இதுவரை எந்த பதில்களும் இல்லை. இவ்வாறான விசித்திரமான மர்மமான பொருள்களின் போட்டோக்களை மேலே கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். இதேபோல், மர்மம் நிறைந்த பொருள்கள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
சினிமா ரவுண்டப்: கோவையில் இட்லி கடை டிரெய்லர் நிகழ்ச்சி

*மதராஸி படத்தின் ‘சலம்பல’ வீடியோ பாடல் இன்று வெளியாகிறது.
*கோவையில் உள்ள மாலில் 20-ம் தேதி இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நடைபெறுகிறது.
*தெலுங்கில் வெளியான ‘மிராய்’ 100 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது.
*நடிகை சரோஜாதேவி பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
News September 18, 2025
போலி வாக்காளர்கள்: மீண்டும் குண்டை தூக்கிப்போட்ட ராகுல்

மகாராஷ்டிராவின் ராஜுராவில் போலியாக 6,850 வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதில், பாதி பேரின் முகவரியில் ‘Sasti, Sasti’ என இருப்பதாக தெரிவித்த அவர், கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியிலும் 6,018 வாக்காளர்களை நீக்கும்படி போலி விண்ணப்பங்கள் வந்ததாகவும் கூறியுள்ளார். ஆலந்த் தொகுதி தற்போது காங்., இடமும், ராஜுரா தொகுதி பாஜகவிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.