News March 3, 2025
ஹஜ் பயணிகளுக்கு தங்கும் விடுதி – முதல்வர் அறிவிப்பு

நாகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்று பேசினார். அப்போது தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களின் நலன் கருதி சென்னையில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பின் போது அரங்கில் கூடியிருந்தோர் கர கோஷம் எழுப்பினர்.
Similar News
News July 5, 2025
நாகப்பட்டினம்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் நாகை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!
News July 5, 2025
நாகையில் சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி..!

நாகை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் (அ) அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு இந்த <
News July 5, 2025
நாகை புதிய கடற்கரையில் இன்று மாலை திரைப்படம் திரையிடல்

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ஜூலை 5 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதில் எல்லோரும் வந்து கலந்து கொண்டு திரைப்படத்தை கண்டு களித்து செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு ஆகாஷ் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.