News March 3, 2025
ஹஜ் பயணிகளுக்கு தங்கும் விடுதி – முதல்வர் அறிவிப்பு

நாகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்று பேசினார். அப்போது தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களின் நலன் கருதி சென்னையில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பின் போது அரங்கில் கூடியிருந்தோர் கர கோஷம் எழுப்பினர்.
Similar News
News December 5, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்கள், 50 கன்னியாஸ்திரிகளுக்கு ECS முறையில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
நாகை மாவட்ட மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

நாகை மாவட்டத்தில் சப்தவிடங்க தலங்களுக்கு ஒருநாள் பாரம்பரிய சுற்றுலா வருகின்ற டிசம்பர் 7ம் தேதி காலை 5:30 மணி அளவில் அழைத்து செல்லப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி நாகை மாவட்டத்தில் உள்ள ஏழு திருத்தலங்களுக்கு சென்று வர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 8943827941 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு நாகை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 4, 2025
நாகை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

நாகை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <


