News March 26, 2025
ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை

காஞ்சிபுரம் ஏனைகரன் உள்ள நாராயணா பாளையம் தெருவில் அமைந்திருக்கும் கோயிலில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவில் இன்று மார்ச் 26 புதன்கிழமை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது பக்தர்கள் ராமர் பாட்டை பாடி மகிழ்ந்தார்கள் அங்கு பிரசாதமாக கேசரி கொடுக்கப்பட்டது
Similar News
News November 23, 2025
காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 24 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார், எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 23, 2025
காஞ்சி மக்களை சந்திக்கும் த.வெ.க தலைவர் விஜய்

சுங்குவார்சத்திரம் அருகே தனியார் கல்லூரியில் த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் இன்று கூட்டம் நடைபெறுகிறது. இதில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். QR குறியீடு உள்ள அனுமதி அட்டை பெற்ற 2,000 பேர் மட்டுமே இதில் அனுமதிக்கப்படுவர். இதற்காகக் கல்லூரியைச் சுற்றி 1 கி.மீ தூரத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள், பெண்கள் & விவசாயிகளுடன் விஜய் கலந்துரையாட உள்ளார்.
News November 23, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


