News August 26, 2024
ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆக.26) கோகுலாஷ்டமியை முன்னிட்டு பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நவநீதகிருஷ்ணன் சுவாமியை வழிபட்டு மகிழ்ந்தனர்.
Similar News
News November 19, 2025
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ.21 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் அளிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
விருதுநகரை உலுக்கிய கொலையில் மேலும் ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயில் காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் ஏற்கனவே ஒருவர் சுட்டு பிடிக்கப்பட்டு நிலையில் மற்றொரு குற்றவாளி முனியசாமியை போலீசார் ட்ரோன் மூலம் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழை!

விருதுநகர் மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


