News August 7, 2024
ஸ்ரீவி., தேரோட்டம்: நிலைக்கு வந்த ஆண்டாள் தேர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்புர தேர் திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளி ஆண்டாள், ரெங்கமன்னர் காட்சியளித்தனர். இதனையடுத்து தேரோட்டத் திருவிழா இன்று காலை 9.05 மணிக்கு தொடங்கி ரத வீதிகள் வழியாக வந்து மீண்டும் 12:24 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.
Similar News
News November 27, 2025
விருதுநகர்: சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள்

சேத்துாரில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக வந்த புகாரை அடுத்து போலீசார் ரோந்து செய்தனர். அதில் தளவாய்புரம் பகுதி அருகே நான்கு பேரிடம் சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்ததில் கல்லுாரி மாணவர்கள் தளவாய்புரம் மு.வினோத்குமார் 19, முகவூர் பி.வினோத்குமார், சதீஷ்குமார், முத்துச்சாமி புரத்தை சேர்ந்த இளைஞர் அன்பு ராஜ் 23, நான்கு பேர் என தெரிந்து கைது செய்தனர்.
News November 27, 2025
விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் மதுரை சரக டிஐஜி ஆய்வு

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மதுரை சரக டிஐஜி அபிநவ்குமார் வந்திருந்தார். அப்போது அவர் அமைச்சுப் பணியாளர்கள் கையாளும் போலீசாரின் சம்பள பட்டியல், பொருட்கள் வாங்கப்பட்டவை, போலீசாரின் போக்குவரத்து பயணப்படி ஆவணங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும், நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த ஆவணங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து டிஐஜி காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.