News November 23, 2024
ஸ்ரீவி அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

ஸ்ரீவி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் இவரது உறவினரான ரிஷிகேசவனும் ஸ்ரீவில்லிபுத்தூர் – ராஜபாளையம் சாலை, தனியார் வெகேஷனல் சென்டர் அருகே இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி,சாலையின் ஓரத்தில் இருந்த இரும்பு கம்பியில் மோதினர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரிஷிகேசவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
விருதுநகர்: ஒரே மாதத்தில் 200 பேர் பாதிப்பு

காரியாபட்டி அருகே நேற்று இரவு எஸ்.தோப்பூரில் விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த் 12, ரிதன் 12 உள்ளிட்ட 7 பேரை நாய் கடித்தது.இதேபோல் சில தினங்களுக்கு முன் ஆவியூரில் 15க்கும் மேற்பட்டோரை கடித்தது. காரியாபட்டியில் ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்து ரேபிஸ் தடுப்பூசி போட்டுள்ளது குறிப்பிடதக்கது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
News November 19, 2025
பள்ளி மாணவர்களுக்கு நெகிழி தீமை குறித்து விழிப்புணர்வு

அருப்புக்கோட்டை நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக இன்று வெள்ளக்கோட்டை செங்குந்தர் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு நெகிழி தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி நெகிழி பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News November 19, 2025
அருப்புக்கோட்டையில் கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

அருப்புக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்மார்ட் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் இன்று (நவ.19) நகராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


