News December 6, 2024
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி

தேனி பகுதியைச் சேர்ந்தவர் வைரவன்மாரி. இவர் மினி வேனில் இன்று காலை தேனியில் இருந்து வாழைப்பழங்களை ஏற்றி விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இறக்குவதற்காக சாமிநத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே செங்கல் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலே வாழைப்பழம் ஏற்றி வந்த டிரைவர் வைரவன்மாரி உயிரிழந்தார்.சம்பவம் குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 1, 2025
விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி காயம்

ஆவரங்குளம் – இடையப்பட்டி செல்லும் வழியில் அரசகுளம் கார்த்திக்(32),மனைவி கார்த்தீஸ்வரியுடன் பைக்கில் தனது தோட்டத்திற்கு சென்ற போது பக்கத்து தோட்டத்தில் போட்டிருந்த மின்வேலியில் இருந்த மின்சாரம் தாக்கி இருவரும் காயம் அடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த ஆவரங்குளம் குணசேகரன் மீது அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
News December 1, 2025
விருதுநகர்: 10th போதும்., எய்ம்ஸ்-ல் வேலை உறுதி!

விருதுநகர் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <


