News January 23, 2025
ஸ்ரீவியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி புலிகள் காப்பக பகுதியாக உள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கேமராவில் சிறுத்தை சுற்றுத்திரியும் காட்சிகள் பதிவாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News July 8, 2025
விருதுநகரில் நாளை பட்டா மாற்றம் செய்யலாம்

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து நாளை(ஜூலை.9) காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் முன்னோர்களின் பெயரில் உள்ள பட்டா மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இதில் கலந்து பாட்டாக்களை தங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
ஸ்ரீவி அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணி புரிந்து வரும் ரமேஷ் பாபு என்ற மருத்துவரை அவரது தனியார் மருத்துவமனை முன்பு கத்தியால் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ரமேஷ் பாபு காயமடைந்தார். உடனடியாக ரமேஷ் பாபுவை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News July 7, 2025
ராஜபாளையம்: பரியாணி கடை வைக்க ரூ.25 கோடி மோசடி

ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்த கங்காதரன் என்பவர் 2 வருடங்களுக்கு முன்பு பிரபல மரக்கார் பிரியாணி கடை நடத்தி வருவதாகவும், அதற்கு கிளை திறக்க உள்ளதாக கவர்ச்சியாக விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்து தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பண்டிச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த 239 பேரிடம் ரூ.25 கோடி வரை மோசடி செய்தார். இதில் கங்காதரனை இன்று விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.