News January 23, 2025

ஸ்ரீவியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி புலிகள் காப்பக பகுதியாக உள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கேமராவில் சிறுத்தை சுற்றுத்திரியும் காட்சிகள் பதிவாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News December 5, 2025

சிவகாசி: கண்மாயில் கிடந்த சடலம்

image

சிவகாசி அருகே ரிசர்வ்லைன் சிலோன் காலனி கண்மாய் பகுதியில் முதியவர் சடலம் ஒன்று கிடப்பதாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாரனேரி போலீசார் முதியவர் உடலை மீட்டு நடத்திய விசாரணையில், உயிரிழந்த முதியவர் மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த ராமர் (78)என்பது தெரியவந்தது. கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 5, 2025

அருப்புக்கோட்டை: மூதாட்டியிடம் செயின் பறிப்பு

image

விளாத்திகுளம் அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் நேற்று தனது மனைவி சுலோச்சனா(65) உடன் காரியாபட்டி அருகே கணக்கநேந்தல் சென்று விட்டு பைக்கில் அருப்புக்கோட்டை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது ராமசாமிபுரம் பகுதியில் பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்ற நிலையில் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 5, 2025

விருதுநகர்: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

error: Content is protected !!