News April 7, 2025
ஸ்ரீரங்கம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் நாளைய தினம் (08.04.25) திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருச்சி பீமநகர் கொச தெருவை சேர்ந்தவர் சைமன் கிஷோர் (23). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி செம்மொழி ரயிலில் சென்று கொண்டிருந்த அஞ்சலி (31) என்ற பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சைமன் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News January 1, 2026
திருச்சி: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

திருச்சியில் 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறப்பு
2. முசிறி வருவாய் கோட்டாட்சியர் அரமுத தேவசேனா விபத்தில் பலி
3. தவெக தலைவர் விஜய் பரப்புரை
4. சிறுகனூர் அருகே இளம்பெண் எரித்து கொலை
5. புத்தூர் பகுதியில் சிவாஜி சிலை திறப்பு
6. திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டிக்கொலை
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க.
News January 1, 2026
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


