News August 24, 2024

ஸ்ரீரங்கம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

image

ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படிதுரை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணியினை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாக முடிக்கவும், உறுதியாகவும், தரமாகவும் கட்டி முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

Similar News

News November 3, 2025

திருச்சி – திருவனந்தபுரம் விமான சேவை தொடக்கம்

image

திருச்சி விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (நவ.1) முதல் தொடங்கியுள்ளது. இந்த விமானம் வாரந்தோறும் திங்கள் கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட உள்ளது. மதியம் 2:20 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி வரும் இந்த விமானம், பிற்பகல் 3:05 மணிக்கு திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

திருச்சி ரயில்வே அதிகாரி எச்சரிக்கை!

image

திருச்சி கோட்டத்தில் பெரும்பாலான விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் உயிரழுத்த மின்சாரம் மூலமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த உயரழுத்த மின் கம்பிகள் மற்றும் அதனைத் தாங்கும் கம்பங்களின் அருகில் சென்றாலே உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இதன் அருகில் சென்று யாரும் செல்பி எடுக்கவோ, போட்டோ எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம் என திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

News November 2, 2025

திருச்சி: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்து Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!