News August 3, 2024
ஸ்ரீரங்கத்தில் இளைஞர் அடித்து கொலை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் அடித்துக்கொடூரமாக கொல்லப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடி பெருக்கையொட்டி, காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடி வரும் நிலையில், வேடிக்கை பார்ப்பதில் ஏற்பட்ட மோதலில், இக்கொலை அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகரில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து கொலைகள் நடப்பதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News November 15, 2025
திருச்சி: நகைகளை திருடிய ஓட்டுனர்

திருச்சி, கீழ வாளாடியைச் சேர்ந்த சிந்துஜா என்பவரது வீட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் பிரபாகரன். இந்நிலையில் சிந்துஜா தனது வீட்டில் தங்க நகை காணாமல் போனதை கண்டுபிடித்துள்ளார். பின்னர் அவர் லால்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்தபோது ஓட்டுநர் பிரபாகரன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பிரபாகரனை கைது செய்து நகைகளை மீட்டனர்.
News November 15, 2025
திருச்சி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 15, 2025
திருச்சி: இரும்பு குழாய்கள் ஏற்றி வந்த வாகனம் விபத்து

திருச்சி – திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில் பகுதியில், இன்று அதிகாலை அதிக பாரம் ஏற்றிவந்த சரக்குவாகனம் பேரிகார்டு இருப்பது தெரியாமல், பிரேக் பிடித்தபோது, இரும்பு குழாய்கள் சாலையில் விழுந்து சிதறியது. பேரிகார்டு உள்ள பகுதியில் போதிய மின்வெளிச்சம் இல்லாததே இந்த விபத்திற்கு காரணம் என்பதால் பேரிகார்டு உள்ள பகுதியில், மின்விளக்கு ஏற்படுத்திடவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


