News March 28, 2024
ஸ்ரீபெரும்புதூர்: ஆபத்தான நிலையில் பயணிக்கும் மாணவர்கள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று காலை கண்டெய்னர் லாரியின் பின்புறமாக நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 19, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

போக்குவரத்து கழகத்தில் 1004 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை <
News April 19, 2025
கைவினைத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி வைக்கிறார். குன்றத்தூரில் நடைபெறும் இந்த விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும், 8,951 கைவினைத் தொழில் முனைவோருக்கு ரூ.170 கோடி கடன் மற்றும் ரூ.34 கோடி மானியம் வழங்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சிறிது நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
News April 19, 2025
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் எளிதாக விண்ணப்பிக்க, காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு இடங்களில் இன்று (ஏப்ரல் 19) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க