News September 15, 2024

ஸ்ரீதிருவேங்கடமுடையானுக்கு சிறப்பு பூஜை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் ஆவணி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத திருவேங்கடமுடையான் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News November 1, 2025

சிவாகசி: புதிய ரவுண்டானவால் சிக்கல்

image

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் முன்பாக ரெட்டை பாலம் சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைத்து அதில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்படுகிறது. நான்கு சாலைகள் பிரியும் பகுதியில் அமையும் இந்த ரவுண்டானா மிகப்பெரிய அளவில் அமைக்கப்படுவதால் சிவகாசி நகரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் GH நோக்கி வலதுபுறம் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் நெருக்கடி நிலை உள்ளது. எனவே ரவுண்டான அளவை சிறிதாக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News November 1, 2025

விருதுநகர்: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்..

image

விருதுநகர் மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்த 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ. 25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <>இங்கு கிளிக் <<>>செய்யவும். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 1, 2025

விருதுநகர்: கொலை வழக்கில் இருவர் கைது

image

சென்னிலைகுடி கிராமத்தில் கடந்த அக்.30ல் கூலித் தொழிலாளி அசோக்ராஜ் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரின் விசாரணையில் அசோக்ராஜ் உறவினர்கள் (அண்ணன் முறை) சங்கர் (57) மற்றும் சுந்தரமூர்த்தி (43) ஆகிய இருவரும் சேர்ந்து இடப்பிரச்சினை காரணமாக மதுபோதையில் இருந்த அசோக்ராஜை தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. திருச்சுழி போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!