News January 24, 2025
ஸ்ரீதர் வேம்புவிடம் வாழ்த்து தென்காசி பாஜக தலைவர்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ஆனந்தன் அய்யாசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ZOHO நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவை கடையம் அருகே கோவிந்தபேரியில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று(ஜன.23) சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News November 13, 2025
தென்காசியில் வரும் 16ஆம் தேதி கண் சிகிச்சை முகாம்

தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட சுப்பராஜா சேரிட்டி டிரஸ்ட் பில்டிங்கில் வரும் நவ.16ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. நாளை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
News November 13, 2025
செங்கோட்டை – நெல்லை ரயில் 13 நாட்கள் ரத்து

நெல்லை ரயில் நிலைய 6வது பிளாட்பாரம் அமைக்கும் பணி காரணமாக செங்கோட்டையிலிருந்து காலை 10.05 மணிக்கு நெல்லைக்கு புறப்படும் ரயில் நெல்லையிலிருந்து மதியம் 1.40 மணிக்கு செங்கோட்டை புறப்படும் ரயில் ஆகியவை சேரன்மகாதேவி – நெல்லை – சேரன்மகாதேவி இடையே இன்று 13ம் தேதி மற்றும் 14, 15, 17, 19, 20, 21, 22, 24, 25, 26, 28, 29 ஆகிய தேதிகளில் பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
தோரணமலை கோவிலில் நாளை வருண கலச பூஜை

தென்காசி கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நாளை நவ.14 காலை வருண கலச பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலையில் மலை உச்சியில் இருந்து பக்தர்கள் கிரக குடம் எடுத்து வந்து அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து கூட்டு திருப்பலியும் நடைபெற உள்ளது.


