News April 3, 2025

ஸ்ட்ரெஸ்ஸில் உள்ளீர்களா இங்கே செல்லுங்கள்

image

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருவண்ணாமலை வல்லாள கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பொழுது முருகப்பெருமான் (கம்பத்தில்) தூணில் காட்சியளித்து காப்பாற்றினார். ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடலை அருணகிரிநாதர் அப்போது பாடினார். எனவே மன அமைதி இல்லாதவர்கள் கம்பத்து இளையனாரை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 4, 2025

தி.மலை : அரசு பஸ் மோதி இளம்பெண் பலி!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பன்னீர்(35). இவரின் மனைவி தரணி(32). இருவரும் நேற்று முன் தினம் இரவு போளூரில் நடந்த உற்வைனர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பைக்கில் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது, ஆரணி – போளூர் நெடுஞ்சாலையில் வந்த அரசு ப மோதியதில் தூக்கி வீசப்பட்ட தரணி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

News November 4, 2025

தி.மலை: தண்டவாளத்தில் வாலிபர் சடலம்!

image

தி.மலை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நேற்று(நவ.3) மாலை தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் வாலிபர் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீசார் விசாரித்ததில், இறந்தவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த செல்வமணி(30)என்பது தெரிய வந்தது. மேலும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 4, 2025

திருவண்ணாமலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு 10 மணி இன்று (நவ.4) முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருவண்ணாமலை, போளூர், அரணி, சோலைமலை பகுதிகளில் சிறப்பு ரோந்து நடைபெறும். அவசர நேரத்தில் 100 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!