News January 11, 2025

ஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமரா திருட்டு

image

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் நியூ காலனியை சேர்ந்த பிரபு என்பவர் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று முன்தினம் (ஜன.09) கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கேமரா உள்ளிட்ட கருவிகள் மற்றும் ரூ.2500 பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது சிசிடிவி கேமரா மூலமாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து தற்போது பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 9, 2025

பெரம்பலூர்: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள், பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். வருகிற டிச.31ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296565 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2025

பெரம்பலூர்: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (08.12.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், சவுதி அரேபியா நாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இறப்பு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3.41 லட்சத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!