News October 28, 2024
ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பங்கேற்பு

புதிய நிறுவனங்கள் துவங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள ஓட்டலில் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் சிரிய மருத்துவமனைகள், சிறிய தொழில் நிறுவனங்கள் துவங்குவது தொடர்பான திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் டாக்டர்கள் உட்பட 60 தொழில் முனைவோர் பங்கேற்று பயன் பெற்றனர்.
Similar News
News April 30, 2025
தொழிலாளியின் கன்னத்தை கடித்து துப்பிய போதை ஆசாமி

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த இம்ரான்(38), லாலி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றபோது, அங்கு வந்த ராஜனுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜன், இம்ரானின் கன்னத்தை கடித்து துப்பினார். காயமடைந்த இம்ரான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 29, 2025
கோவை: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

கோவை சூலூரை சேர்ந்த ஸ்ரீநிவேதா, தனது தாயார் வாணியுடன் காரில் செஞ்சேரி மலை முருகன் கோயிலுக்கு சென்றிருக்கிறார். பார்க்கிங்கில் காரை நிறுத்த முயன்ற போது, பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால், 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக ஏர்பேக் ஓபன் ஆனதால், இருவரும் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 29, 2025
கோவை: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்!

▶️ காந்திபுரம் – 9498101143. ▶️ ஆர்.எஸ்.புரம் – 0422-2475777. ▶️ மதுக்கரை – 9498101184. ▶️ பேரூர் – 0422-2607924. ▶️ தொண்டாமுத்தூர் – 0422-2617258. ▶️ பெ.நா.பாளையம் – 9498101189. ▶️ மேட்டுப்பாளையம் – 9498101186. ▶️ அன்னூர் – 9498101173. ▶️ கருமத்தம்பட்டி – 9498101178. ▶️ சூலூர் – 7845175782. ▶️ பொள்ளாச்சி டவுன் – 04259-224433. ▶️ ஆனைமலை – 04253-282230. ▶️ வால்பாறை – 9487374392. இதை SHARE பண்ணுங்க.