News April 4, 2025
ஷவர்மா சாப்பிட்டு 20 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்ட ரோஹித் (17) என்பவருக்கு உடல்நலம் பாதித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உணவகத்தில் சாப்பிட்ட 20 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சிக்கன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
Similar News
News October 23, 2025
சென்னை: கனமழை களப்பணியில் 22 ஆயிரம் பேர்

சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்திற்கு(1913) மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழையை முன்னிட்டு, பொறியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 2,149 பேரும் களப் பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
News October 23, 2025
தண்ணீரில் மூழ்கி 2 வயது சிறுமி பலி!

சென்னை: மாங்காடு ஜனனி நகரைச் சேர்ந்த பிரினிகா ஸ்ரீ(2) வீட்டின் அருகே இருந்த காலிமனையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை காணாமல் போன நிலையில், இருந்த காலிமனையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 23, 2025
சென்னையில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்!

சென்னையில் வசிக்கும் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன:
▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!