News October 24, 2024
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து அக்.16 முதல் வினாடிக்கு 800 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று(அக்.23) முதல் வினாடிக்கு 100 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
தேனி மக்களே உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News November 26, 2025
தேனி: அக்காவின் கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள்

பெரியகுளம் ஒன்றியம் சருத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவருக்கும் இவரது மைத்துனர் ஜெயராமன் என்பவருக்கும் இடப்பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 2022.ல் ஜெயராமன், ஜெயபாலனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (நவ.25) ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
News November 26, 2025
தேனி: கொலை செய்த மூதாட்டிக்கு ஆயுள்

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் பெருமாயி (70) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 2024.ல் மாரிச்செல்வம் மீது பெருமாயி பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பெருமாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து (நவ.25) தீர்ப்பு.


