News June 25, 2024
வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க அழைப்பு

மதுரை மாவட்டத்தில் 21 – 40 வயதுக்குட்பட்ட வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி, “பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தல் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் தொடங்க வரும் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
மதுரை: மனைவியுடன் தகராறு… உயிரை மாய்த்த தொழிலாளி

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சாம்பிரவேஷ் மகன் திவாகர்(37). இவர் கடச்சநேந்தலில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து பெயிண்டில் கலக்கும் டர்பைண்டன் ஆயிலை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கோ.புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
மதுரையில் இது வரை 78 பேர் பாதிப்பு

வடகிழக்கு பருவமழையால், பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து மதுரை அரசு தனியார் மருத்துவமனைகளில்ல சிகிச்சை பெற வரும் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரையில் 33 குழந்தைகள் 45 பெரியவர்கள் என மொத்தம் 78 பேர் காய்ச்சல் பாதிப்பில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுதவிர 3 பெண்கள் 1 ஆண் டெங்கு பாதிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.
News November 15, 2025
மதுரை: ரூ.88,635 ஊதியத்தில் வேலை!

மதுரை மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


