News March 25, 2025
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 45ஆவது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, செல்வம் ஐஏஎஸ், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் சிறப்பு மற்றும் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் 4,611 மாணவர்கள் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 13, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (13.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
ஆன்லைன் விண்ணப்பத்தில் குழப்பங்கள்: அண்ணாமலை!

கோவை சின்னியம்பாளையத்தில் பா.ஜ.க விவசாயிகள் அணிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தில் பல குழப்பங்கள் உள்ளன. இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி உடனே தீர்வு காண வேண்டும் என்றார். மேலும் நவ.19 அன்று பிரதமர் மோடி கோவையில் இயற்கை விவசாயிகளை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.
News November 13, 2025
கோவை: உள்ளூரில் வேலை அரிய வாய்ப்பு!

கோவை ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் OK BOZ எனும் நிறுவனத்தில், OFFICE ADMIN பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு +2 முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு Fresher மற்றும் முன் அனுபவம் உள்ள ஆண்/பெண் இருபாலரும் நவ.27ம் தேதிக்குள், இந்த லிங்கை <


