News August 9, 2024

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிற்சி முகாம்

image

கோவை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் அனைத்து வட்டாரங்களிலுள்ள ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடப்பு ஆண்டிற்கு (2024-25) திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 19.08.24 முதல் 24.08.24 வரை 6 நாட்கள் உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. 

Similar News

News December 25, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எஸ்.எஸ். தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ் கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் கலெக்டரேட் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) மற்றும் புளியகுளம் சாலை, படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்
ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 25, 2025

கோவையில் நிலம் வாங்க மானியம்: விண்ணபிப்பது எப்படி?

image

1).நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.)குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3).2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4).100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5). <>newscheme.tahdco.com<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6).மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம். SHAREit

News December 25, 2025

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையம் குமரன் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்களிடையே நுகர்வோர் உரிமை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்கள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் 50 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!