News August 24, 2024
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்

வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு மயிலாடுதுறை மார்க்கமாக சென்று 29-ஆம் தேதி காலை 3.30 மணியளவில் வேளாங்கண்ணி சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக 30-ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும்.
Similar News
News July 8, 2025
அரசு ஐடிஐ-க்களில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சோ்க்கைக்கு 10, 12 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சோ்க்கைக்கு வரும்போது கைப்பேசி, ஆதாா் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் & புகைப்படம் எடுத்து வர வேண்டும். மேலும் தகவலுக்கு 94990-55737 தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
மயிலாடுதுறை: 10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை

மயிலாடுதுறை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <
News July 8, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்வு எழுதும் 15,880 பேர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 12.7.2025 சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 52 தேர்வு கூடங்களில் மொத்தம் 15880 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு எழுதுபவர்களுக்கு பேருந்து வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.