News August 24, 2024
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்

வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு மயிலாடுதுறை மார்க்கமாக சென்று 29-ஆம் தேதி காலை 3.30 மணியளவில் வேளாங்கண்ணி சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக 30-ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும்.
Similar News
News November 17, 2025
மயிலாடுதுறை: B.E போதும் வங்கி வேலை ரெடி!

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வாகனம் ஓட்டுவதற்கு வயது மிக முக்கியம், வயது குறைந்த சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும் மீரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
மயிலாடுதுறை: மழையா? இதை மறக்காதீங்க!

மயிலாடுதுறை மக்களே தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கி தரப்படும்! SHARE


