News April 22, 2025
வேளாங்கண்ணியில் 9 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் துக்கம் அனுசரிக்கும் வகையில், அவரது வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப 88 முறை பேராலய மணிகள் ஒலிக்கப்பட்டன. பேராலயத்தில் போப் பிரான்சிஸ் படம் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தும் வகையில் படத்தைச் சுற்றி மலர்வளையம், மலர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை தொடர்ந்து பேராலயத்தில் 9 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
நாகை: தேர்தல் தேதி அறிவிப்பு – கலெக்டர்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நாகை மாவட்ட கிளைத் தேர்தல் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் வெளியிட்ட அறிக்கையில், நாகை மாவட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவு வரும் நவம்பர் 24-ஆம் தேதி நாகப்பட்டினம் முதன்மை நிலையத்தில் நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
நாகை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

நாகை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<
News November 12, 2025
நாகை: ரயில் சேவை ரத்து

நாகை வழியாக காரைக்காலில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு–காரைக்கால் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் ரயில் எண் 16239 (பெங்களூரு–காரைக்கால்), 16240 (காரைக்கால்–பெங்களூரு) ஆகிய ரயில்கள் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


