News March 31, 2024
வேளாங்கண்ணியில் போக்குவரத்து மாற்றம்

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட தமிழக மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பேருந்துகள், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
நாகை:ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு?

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
News April 18, 2025
நாகையில் கோடை விடுமுறைக்கு ஏற்ற இடங்கள்

கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் நாகையில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்: 1. வேளாங்கண்ணி மாதா கோவில், 2. வேளாங்கண்ணி கடற்கரை, 3. காயாரோகணசுவாமி கோவில், 4.கோடியக்கரை கடற்கரை , 5.கோடியக்கரை சரணாலயம், 6.வேதாரண்யம் கடற்கரை, 7. சிக்கல், 8.காயாரோகணசுவாமி கோவில் ஆகியவை கோடைகாலத்திற்கு ஏற்ற இடங்கள் ஆகும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.. உங்களுக்கு தெரிஞ்ச இடத்தை கமெண்ட் பண்ணுங்க
News April 18, 2025
சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

கீழ்வேளூரை சேர்ந்தவர் மாதவன், இவர், அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக, ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கடந்த 2021, ஜூன் 28ம் தேதி அளித்த புகாரி பேரில் மாதவன் போக்சோ சட்டத்தில் கைதானார். இதையடுத்து நாகை போக்சோ கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் மாதவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகா உத்தரவிட்டார்.