News April 3, 2025
வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க

டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தென் மாவட்டத்தில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள், கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 4, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு!

வேடசந்தூர் மத்திய புகையிலை ஆராய்ச்சி மையத்தில் உள்ள வானிலை மையம் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவை இன்று மில்லி மீட்டரில் வெளியிட்டுள்ளது. திண்டுக்கல் 17.00-காமாட்சிபுரம் 0.50-நத்தம் 0.00-நிலக்கோட்டை 7.20-சத்திரப்பட்டி 37.60- வேடசந்தூர் தாலுகா 2.20-பழனி 11.00-கொடைக்கானல் ரோஸ் கார்டன் 47.50-பிரேயன்ட் பார்க் 45.80-என மாவட்டத்தில் சராசரியாக 17.10 -ம்,மொத்தமாக 171.00 மழை பதிவாகியுள்ளது
News December 4, 2025
திண்டுக்கல்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

திண்டுக்கல் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News December 4, 2025
நிலக்கோட்டையில் பீர் பாட்டிலால் குத்தி கொலை: அதிரடி கைது!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் லாரன்ஸ்(49) இவரது உறவினரான செபஸ்டின் ஜெயராஜ்(29) என்பவரும் கோவில்மேடு சிவன் கோவில் அருகே மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் செபஸ்டின் ஜெயராஜ் பீர் பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்தார். தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீசார் செபாஸ்டின் ஜெயராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


