News April 5, 2025
வேலைவாய்ப்பு மோசடி: காவல்துறையை எச்சரிக்கை

வேலைவாய்ப்பு மோசடி கொடுத்து திருச்சி மாவட்ட காவல்துறையில் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்
நிறுவனம் பற்றிய நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், வேலை வாய்ப்பு உண்மையானது என்பதை உறுதிப்படுத்தும் வரை உங்களின் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
தேவையற்ற சலுகைகள், முன்பணம் செலுத்த சொல்வது, நடைமுறைக்கு மாறான வாக்குறுதிகள் போன்றவற்றிலிருந்து எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 23, 2025
திருச்சி: பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்

திருச்சி, பெட்டவாய்த்தலை மேலஆரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஹர்ஷிதா (16), விடுமுறைதினம் என்பதால் தோழிகள் 3 பேருடன் காவிரி ஆற்றில் குளித்தபோது நீர்வரத்து அதிகரித்ததால் 4 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து 3 மாணவிகளை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் நீரில் மூழ்கிய மாணவி ஹர்ஷிதா நீண்டநேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
News October 22, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.23) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மணிகண்டம் ஒன்றியம் கோனார் சத்திரம், திருவெறும்பூர் ஒன்றியம் வாழவந்தான் கோட்டை, புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம், தொட்டியம் ஒன்றியம் காடுவெட்டி, உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
திருச்சி: இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க