News April 26, 2025
வேலைவாய்ப்பு தரும் திருவண்ணாமலை கோயில்

திருவண்ணாமலை தேவிகாபுரத்தில் அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அம்பாளை வழிபட்டுவிட்டு பின்னர் சிவனை வழிபடுகின்றனர். வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காக இக்கோயிலில் பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 6, 2025
தி.மலை: தீபம் ஏற்றிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

வந்தவாசியை அடுத்த சளுக்கையை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் பாண்டியன் மனைவி ஸ்ரீமதி கடந்த 3-ம் தேதி தீபத் திருவிழாவிற்காக வீட்டில் அகல் விளக்கு ஏற்றினார். அப்போது, அருகே வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன் மீது அவரது கால்பட்டு, கொட்டிய பெட்ரோலில் தீப்பிடித்து அவரது சேலையில் பற்றியது. அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீமதி உயிரிழந்தார்.
News December 6, 2025
தி.மலை: மது விற்ற 2 பெண்கள் கைது!

வந்தவாசி அருகே தொள்ளார் பகுதியில் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையில் ரோந்து பணி நேற்று நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் லைலா என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் இருந்த நிலையில் அவரை கைது செய்தனர். மேலும் கோட்டை காலனி பகுதியை சார்ந்த அமுல்ராணி என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனி மது விற்றால் கைது செய்வோம் என்று அறிவுத்தினர்.
News December 6, 2025
தி.மலை: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

கீழ்பென்னாத்தூர் வட்டம் மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (டிச.06) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை மங்கலம், நூக்காம்பாடி, எரும்பூண்டி, கொத்தந்தவாடி, மணிமங்கலம், பாலந்தல், இராந்தம், ஆர்ப்பாக்கம், வேடந்தவாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


