News May 7, 2025

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவி!

image

திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மே 31-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது இணையதளத்திலோ இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதம் ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்!

Similar News

News October 29, 2025

தி.மலை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர்,

1.கூட்டு பட்டா,

2.விற்பனை சான்றிதழ்,

3.நில வரைபடம்,

4.சொத்து வரி ரசீது,

5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்

இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 29, 2025

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

image

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.29) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன அதன்படி, தி.மலை- வி.பி.எஸ்.சி கட்டிடம், மேற்கு ஆரணி- கோபால் திருமண மண்டபம் தேவிகாபுரம், தெள்ளார்- விபிஆர்சி கட்டிடம் அருகில் மேல்பாதி, அனக்காவூர்- சிந்துஜா திருமண மண்டபம் அனக்காவூர், கலசப்பாக்கம்- திருநா கல்யாண மண்டபம் சிங்காரவாடி, ஆகிய இடங்களில் இம்முகாம்கள் நடைபெறும்.

News October 29, 2025

திருவண்ணாமலை : பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1000 உதவித்தொகை

image

தி.மலை அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஊரகத் திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது இத்தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் இந்த கல்வி உதவித்தொகை அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் கிடைக்காது இந்தத் தேர்வு சென்னையை தவிர பிற மாவட்டத்தின் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடத்தப்படுகிறது.

error: Content is protected !!