News April 19, 2025

வேலூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஐந்தாவது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

வேலூர்:தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட போலீஸ்!

image

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (39). இவர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஊனமுற்றார். இதனால் விரக்தியடைந்த வேல்முருகன் (நவ.7) பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News November 8, 2025

வேலூர் அருகே ஆடு திருடிய 3 பேர் கைது

image

அரியூர் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்தி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது ஒரு ஆட்டை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர் அரியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆட்டை திருடிய சத்துவாச்சாரியை சேர்ந்த சீனிவாசன் (27), பாபுசேட்டு (25), வினோத்குமார் (30) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

News November 8, 2025

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி ( நவம்பர்-07) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!