News May 16, 2024
வேலூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி நேற்று (மே 15) தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 11, 2025
வேலூரில் பயிர் காப்பீடு செய்ய கெடு

வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடப்பாண்டு சம்பா பருவ நெற்பயிர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள், அரசு பொது சேவை மையங்களை அணுகி காப்பீடு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.544 செலுத்தி வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
News November 11, 2025
வேலூர்: பள்ளி பேருந்து மோதியதில் குழந்தை பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செட்டிகுப்பம் பகுதியில், நேற்று (நவ.10) தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மோகன் என்பவரின் ஒன்றரை வயது மகள் துர்காஸ்ரீ மீது தனியார் பள்ளி பேருந்து மோதியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.